Home இலங்கை சமூகம் இலங்கை வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி

இலங்கை வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி

0

ஹிக்கடுவை – வேவல பகுதியில் கடலில் மூழ்கி வெளிநாட்டுப்பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதான பெலாருஸ் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரணை

இந்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை ஹிக்கடுவை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது
திடீரென கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பிரதேசவாசிகள் மற்றும்
பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு பலப்பிட்டி வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version