Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு பணவனுப்பல் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாட்டு பணவனுப்பல் தொடர்பில் வெளியான தகவல்

0

ஜனவரி முதல் ஏப்ரல் மாத காலப்பகுதியில் இலங்கைக்கான வெளிநாட்டு பணவனுப்பல் 18.3 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 2,460.5 மில்லியனாக அமெரிக்க டொலராக வெளிநாட்டு பணவனுப்பல் பதிவாகியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்

அதிகாரபூர்வ புள்ளி விவரங்களின் படி, ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் 646.1 மில்லியன் டொலராக பதிவாகியிருந்தது.

எனினும், இது கடந்த மார்ச் மாதத்தில் பதிவான 693.3 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் குறைவாகும் என இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version