Home இலங்கை சமூகம் கண்டியில் விடுதியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு பெண்

கண்டியில் விடுதியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு பெண்

0

கண்டிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை விடுதி ஒன்றில் இருந்து வெளிநாட்டு
பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கண்டி அருப்பொல, தர்மசோக்கா மாவத்தையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்
இறந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவை சேர்ந்த
கெய்ட்லின் ஜூலி கிளார்க் (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை

இவ்வாறு உயிரிழந்த பெண் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி வருகின்றார்.

இவர்
கடந்த 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிகிரியாவுக்குச் சுற்றுலா சென்று வீடு
திரும்பியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிணவறைக்குச் சடலம்
அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version