Home முக்கியச் செய்திகள் ரம்பொடையில் சிக்கி தவித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

ரம்பொடையில் சிக்கி தவித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

0

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா – ரம்பொடை பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று மீட்கப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

சிறப்பு விமானம் மூலம் இவர்கள் கொழும்புக்கு இன்று மாலை அழைத்து வரப்பட்டனர்.

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்

மீட்கப்பட்டவர்களில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அடங்குகின்றனர்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலாப் பயணிகளின் நலன் குறித்து விசாரித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சு முன்னெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்   

 

NO COMMENTS

Exit mobile version