Home இலங்கை குற்றம் வெளிநாட்டு பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது

வெளிநாட்டு பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது

0

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை  நுவரெலியா (Nuwara Eliya ) – டொபாஸ் பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஈரானின் அணு உலைகளை இலக்கு வைக்கும் இஸ்ரேல் – ஈரான் கடும் எச்சரிக்கை

வேனின் சாரதி கைது

நுவரெலியா (Nuwara Eliya) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, ​​19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா (Nuwara Eliya) பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 35 வயதான இங்கிலாந்து பிரஜையான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேனின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்களின் காவலனாக வாழ்ந்த அரசியல்வாதி – அலையென குவிந்த மக்கள் வெள்ளம்

இலங்கையில் சிறுமிக்கு மர்மமான முறையில் ஏற்பட்ட கர்ப்பம் : அதிர்ச்சியில் வைத்தியர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version