Home இலங்கை சமூகம் பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது: அமைச்சர் டக்ளஸ் உறுதி

பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது: அமைச்சர் டக்ளஸ் உறுதி

0

பேருந்து நிலையம்,
தபாலகம், மீன் சந்தை மற்றும் ஆயுர்வேத வைத்திய நிலையம் உள்ளிட்ட மன்னார் (Mannar) பேசாலை மக்களின் அவசிய தேவைகள் நிச்சயம் நிறையு செய்து தரப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

பேசாலை வெற்றி மாதா ஆலயத்தில் இன்று (20.04.2024) நடைபெற்ற மக்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

வவுனியாவில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

பிரச்சினைகளுக்கான தீர்வுகள்

குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்த பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே
அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

இந்நிலையில், மன்னார் நகருக்கு வருகை தந்த அமைச்சர் முதலில் பேசாலை
நகரப்பகுதியில் பேருந்து நிலையம், நவீன சந்தைத் தொகுதி மற்றும் தபால் நிலையம் ஆகியவற்றை அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து கொண்டார்.

அத்துடன், பேசாலை நகர் மத்தியிலுள்ள கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான
காணியில் பேருந்து நிலையம், சந்தை தொகுதி, தபால் நிலையம் மற்றும் ஆயுர்வேத
வைத்தியசாலை போன்றவற்றை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆராயுமாறு துறைசார்
தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழர்களின் ஆதரவை ரணில் பெற முடியாது: சஜித் தரப்பு குற்றச்சாட்டு

தென்னிலங்கையின் மாணவனின் துணிகர செயல் – பொலிஸார் பாராட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version