Home இலங்கை சமூகம் இலங்கையில் உயிரிழந்த வெளிநாட்டு பெண்கள்: ஊகிக்கப்படும் காரணம்

இலங்கையில் உயிரிழந்த வெளிநாட்டு பெண்கள்: ஊகிக்கப்படும் காரணம்

0

இலங்கையில், அண்மையில் பிரித்தானிய மற்றும் ஜெர்மனிய பெண்கள் இருவர்
மரணமானமைக்கு, நச்சுப்புகை பிடித்தலே காரணமாக இருக்கலாம் என்று ‘AFP’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெண் தங்கியிருந்த விடுதி அறையில், பூச்சிகளுக்கு எதிரான புகைபிடிக்கப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட விஷம் காரணமாகவே, பிரித்தானிய
பெண்ணும், ஜெர்மனியின் சுற்றுலா பயணி ஒருவரும் மரணமடைந்ததாக
சந்தேகிக்கப்படுகிறது.

இந்த மரண சம்பவங்கள் குறித்து விசாரித்து வருவதாக இலங்கை பொலிஸார்
தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த வாரம் 24 வயதான பிரித்தானிய மற்றும் 26 வயதான ஜெர்மனிய
பெண்கள் இருவர், வர்த்தக தலைநகர் கொழும்பில் உள்ள விடுதி அறைகளில்
நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

சோதனைகள்

இதில் எபோனி மெக்கின்டோஷ் என்ற பிரித்தானிய பெண், பெப்ரவரி 2 ஆம் திகதி,
மருத்துவமனையில் இறந்தார்.

ஜெர்மன் பெண் பிப்ரவரி 3ஆம் திகதியன்று இறந்தார்.

மேலும், ஒரு ஜெர்மனியர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், அறையில் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட புகை காரணமாக விஷம் உடலில் கலந்ததால், இந்த இறப்புகள் ஏற்பட்டனவா என்பதைக் கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற சில நாட்களுக்கு முன்னரே, குறித்த விடுதியில்
மூட்டைப்பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளுக்கு புகைபிடிக்கப்பட்டதாக,
இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அத்துடன் விடுதியும் பொலிஸாரால் மூடப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version