Home முக்கியச் செய்திகள் விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

0

விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக சுவீடன் நாட்டவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு ரூ.26,500 அபராதம் விதித்துள்ளது.

இந்த உத்தரவை இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சம்பவம் குறித்து வருத்தப்படுவதாகவும், அந்த நேரத்தில் பிரதிவாதி மது போதையில் இருந்ததாகவும், அவருக்கு எந்த குற்ற நோக்கமும் இல்லை என்றும் சுட்க்காட்டியுள்ளார்.

ஒரு மாத சிறை

இதன்படி, உண்மைகளை கருத்தில் கொண்ட நீதிபதி, ரூ.26,500 அபராதம் விதித்தோடு, அபராதம் செலுத்தப்படாவிட்டால் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version