Home முக்கியச் செய்திகள் சிவனொலிபாத மலைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணி பரிதாபமாக பலி

சிவனொலிபாத மலைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணி பரிதாபமாக பலி

0

இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமான சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற சுற்றுலாப்பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (20) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சம்பவம் நல்லத்தண்ணீர் காவல் பிரிவுக்குட்பட்ட ஊசிஆறு என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக பரிசோதனை

மேற்படி சுற்றுலாப்பயணி, டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுற்றுலாப்பயணியின் சடலம் மேலதிக பரிசோதனைக்காக மஸ்கெலியா (Maskeliya) வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெளிநாட்டு தூதரகத்தின் ஊடாக அவது உறவினர்களுக்கு அறிவிப்பதக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version