முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் (Sarath Fonseka) முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்சேகாவின் குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வருகை தரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கூட்டத்தை 5 பேர் மட்டுமே நின்ற நிலையில் அவர்களும் பார்த்து விட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து பேர் கூட வருகை தரவில்லை
அத்துடன், மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை.
Not a soul, literally! Sri Lanka’s former army chief Field Marshal Sarath Fonseka’s election rally!! He is one of the candidates in the Presidential election to be held on September 21. Why do we insult ourselves? #SriLanka pic.twitter.com/Clva59WbNb
— DP SATISH (@dp_satish) August 20, 2024
பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதன் காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
பெரும் அதிர்ச்சி
இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) பெரும் சவால்மிக்க நபராக இருந்தார்.
எனினும் 14 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சரத் பொன்சேகா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.