Home இந்தியா தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் காலமானார்

0

தமிழ்நாட்டின்  முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் (M. Karunanidhi ) மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்.

மு.க. முத்துவின் மறைவை அவருடைய மனைவி சிவகாம சுந்தரி உறுதிப்படுத்தி உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் – பத்மாவதி தம்பதியரின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல் அஞ்சலி

இந்த நிலையில், இன்று 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட படங்களில் மு.க.முத்து நடித்துள்ளார். 

சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

https://www.youtube.com/embed/iNiMjkYcQ0k

NO COMMENTS

Exit mobile version