Home முக்கியச் செய்திகள் சற்றுமுன் துசித ஹல்லொலுவ அதிரடியாக கைது

சற்றுமுன் துசித ஹல்லொலுவ அதிரடியாக கைது

0

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ (Thusitha Halloluwa) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை தவிர்த்து வந்த இவர் இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் விடுத்த கோரிக்கை

கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

நாரஹேன்பிட்ட பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு சமீபத்தில் விசாரணையைத் தொடங்கியது.

விசாரணை தொடர்பாக காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்தார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

NO COMMENTS

Exit mobile version