கொழும்பு, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்தின்
அருகில் உள்ள நிலம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது.
எனினும் அவர் அதை தனது வாகன ஓட்டுநர் பெயரில் வாங்கியதாக அமைச்சர் சுனில்
ஹந்துன்நெத்தி நேற்று(04) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரிடம் ஒப்படைக்க மறுத்ததால்
ஒருமுறை இந்த வாகன ஓட்டுநர், அமைச்சரின் மனைவியுடன் நிலத்துக்கு அருகில்
வைத்து சண்டையிட்டுள்ளார்.
குறித்த ஓட்டுநர் நிலத்தை, அமைச்சரிடம் ஒப்படைக்க மறுத்ததால் சண்டை ஏற்பட்டது
என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்களின் ஓட்டுநர்கள், தோழிகள் மற்றும் உறவினர்கள்
தங்கள் சொத்துக்களை தங்கள் நெருங்கியவர்களுக்கு மாற்றுவதால், அவர்களை
விசாரிக்குமாறு, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஒருமுறை தம்மிடம்
கேட்டுக்கொண்டதாகவும், ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
