முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா (Nalaka Godahewa) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அவர் இன்று (07) காலை முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு முன்னிலையானார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
இன்று (07) காலை அந்த ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
