Home இலங்கை அரசியல் தென்னிலங்கையில் மற்றுமொரு பரபரப்பு – பாரிய ஊழலில் ஈடுபட்ட அமைச்சருக்கு வலைவீச்சு

தென்னிலங்கையில் மற்றுமொரு பரபரப்பு – பாரிய ஊழலில் ஈடுபட்ட அமைச்சருக்கு வலைவீச்சு

0

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக இந்த கைது இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பாக ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடுமையான குற்றச்சாட்டு

அத்துடன் குறித்த அமைச்சின் பல அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு திட்டங்களின் கீழ் அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்துதல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட பல்வேறு வேலை ஒதுக்கீட்டிற்காக தொழிலதிபர்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் பெறுதல் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சினால் பல்வேறு நிபுணர்களுக்கு வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட சலுகையை வழங்க இலஞ்சம் பெறுதல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு இந்த முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version