Home இலங்கை அரசியல் வங்கிக்கணக்கு இல்லாத அரசியல்வாதி

வங்கிக்கணக்கு இல்லாத அரசியல்வாதி

0

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தனவுக்கு வங்கிக்கணக்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் அரசியல்வாதிகள் குழுவிற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்திற்கும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

வஜிர அபேவர்தன, முசம்மில், நவீன் திசாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், மனுஷ நாணயக்கார ​​மற்றும் பலர் இது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

வங்கிக்கணக்கு இல்லையா?

இதன்போது முதலில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடமிருந்து தனக்கும் சம்மன் வந்ததாக கூறியுள்ளார்.

தனக்கு வங்கிக் கணக்கு இல்லை என்ற போது ஏன் வங்கிக் கணக்கு இல்லை என்று அதிகாரிகள் கேள்வியெழுப்பியதாகவும், அது எனக்குப் பிரச்சினையாக இல்லாவிட்டால், நீங்கள் அதை ஒரு பிரச்சினையாக மாற்றக்கூடாது என்று பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது வஜிர சொன்ன கதையை கேட்டு அங்கிருந்த பலர் சிரித்ததுடன், உண்மையிலேயே அவருக்கு வங்கிக் கணக்கு இல்லையா? என்று அங்கிருந்த பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version