Home இலங்கை அரசியல் எங்களின் திட்டங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: கல்வி அமைச்சிடம் கோரும் முன்னைய அமைச்சர்கள்

எங்களின் திட்டங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: கல்வி அமைச்சிடம் கோரும் முன்னைய அமைச்சர்கள்

0

அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்களின் போது, முன்னைய அரசாங்கம்
முன்மொழிந்த திட்டங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன மற்றும் ஐக்கிய
தேசியக் கட்சியின் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர்
இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சிறப்பான யோசனைகள்

தமது அரசாங்கக்காலத்தில் தயாரிக்கப்பட்ட யோசனைகள் சிறப்பானவை என்று
பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

எனவே, அரசாங்கம், கல்வி சீர்திருத்தங்களைத் தயாரிக்கும்போது அவற்றையும் கருத்தில் கொள்வது முக்கியம் என்று ரோஹினி கவிரட்னவும் அகில விராஜ்
காரியவசமும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் கல்வியமைச்சரான டளஸ் அழகப்பெரும, அரசாங்கத்தின்
முன்மொழிவுகள் தொடர்பில் விரைவில் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version