புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மொரட்டுவை (Moratuwa) மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (09.10.2025) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் திட்டங்களை தனது கூட்டாளிகளுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
