முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற சடுதியான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் , முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்தும் சட்டமூலமொன்றை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விஜேராம உத்தியோகபூர்வ இல்லம்
அதனடிப்படையில் விஜேராம உத்தியோகபூர்வ இல்லம் தன்னிடமிருந்து பறிபோய்விடும் என்பதன் காரணமாக அதற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேற மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
தற்போதைக்கு கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் அவர் வசிப்பதற்குப்பொருத்தமான மாளிகையொன்றைத் தேடிக் கண்டறிவதில் அவரது பாதுகாப்புப் பிரிவு மற்றும் தனிப்பட்ட பணியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே எதிர்வரும் நாட்களில் அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்த மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளது.
