Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து பெறப்படும் அரச சொத்துக்கள் : அரசாங்கத்தின் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து பெறப்படும் அரச சொத்துக்கள் : அரசாங்கத்தின் அறிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதிகளிடம் இருந்து பெறப்படும் அரச சொத்துக்களை பொருளாதார ரீதியில்
வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு குறித்த அரசாங்கம் அவதானம் செலுத்தும் என
அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ
குடியிருப்புகள் உள்ளிட்ட விசேட சலுகைகளை நீக்கும் புதிய சட்டத்தை இலங்கை
அரசாங்கம் நடைமுறைபடுத்தத் தொடங்கியுள்ளது

சிறப்பான முறையில்.. 

சில முன்னாள் தலைவர்கள் பல தசாப்தங்களாக அரச வீடுகளில் வசித்து வருவதாகவும்,
அவர்களது குடும்பங்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் அத்தகைய வீடுகளில் வசித்து
வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறினார்.

இந்த அரசியல் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொது ஆணையை இந்த
சட்டம் பிரதிபலிக்கிறது என்றும், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலத்துக்கு
பிறகு அவருக்கும் இது பொருந்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதிகளிடமுள்ள அரச ​​சொத்துக்கள் முழுமையாக
ஒப்படைக்கப்பட்டவுடன், பொருளாதார ரீதியாக உற்பத்தி நோக்கங்களுக்காக அவற்றை
எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கப்பதற்கு அரசாங்கம்
அவற்றின் நிதி மற்றும் சந்தை மதிப்பை மதிப்பிடும் என்று அமைச்சர் நளிந்த
ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். 

NO COMMENTS

Exit mobile version