Home இலங்கை அரசியல் ரணிலை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகள் பலருக்கு காத்திருக்கும் சிக்கல்!

ரணிலை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகள் பலருக்கு காத்திருக்கும் சிக்கல்!

0

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பான  முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு பயணத்திற்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மீது முறைப்பாடுகள்

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், ஏனைய முன்னாள் ஜனாதிபதிகள் மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

  

யாராவது முறைப்பாடு செய்தால் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது வேறு யாராக இருந்தாலும் விசாரணை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கங்களில் அமைச்சுப் பொறுப்புகளை வகித்த பல முன்னாள் அரசியல்வாதிகள் மீது விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version