Home இலங்கை அரசியல் அரசு பொறுப்பை ஒப்படைத்தால் செய்து காட்டுவேன்…! சவால் விடும் சரத் பொன்சேகா

அரசு பொறுப்பை ஒப்படைத்தால் செய்து காட்டுவேன்…! சவால் விடும் சரத் பொன்சேகா

0

அரசாங்கம் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில் பாதாள உலகக்கும்பல்களை ஒழித்துக் கட்ட தான் தயாராக இருப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) அறிவித்துள்ளார்.

அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் (31.03.2025) நடைபெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், முப்பதினாயிரம் பேரளவு கொண்ட நன்கு  பயிற்றப்பட்டவர்களையே நாள் குறித்து அழித்தவன் நான்.

[TUNEIFP
]

பாதாள உலகக்கும்பல்

இந்தப் பாதாள உலகக்கும்பல்களை ஒழிப்பது ஒன்றும் பெரிய காரியம் கிடையாது.

அரசாங்கம் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் 1500 பேரளவான எண்ணிக்கை கொண்ட இந்த பாதாள உலகக்கும்பல்களையும் சில மாதங்களுக்குள்ளாகவே முற்றாக அழித்துவிடுவேன்.

எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அமோக வெற்றி பெறும். அரசாங்கத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version