Home இலங்கை அரசியல் இங்கிலாந்து அரசின் கௌரவிப்புக்கு தயாராகும் இலங்கை வம்சாவளி அரசியல்வாதி!

இங்கிலாந்து அரசின் கௌரவிப்புக்கு தயாராகும் இலங்கை வம்சாவளி அரசியல்வாதி!

0

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த, இங்கிலாந்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தன, இங்கிலாந்தின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2015 முதல் 2024 வரை நாடாளுமன்றத்தில் வடகிழக்கு ஹாம்பஸயரை பிரதிநிதித்துவப்படுத்திய ஜெயவர்தன, பொது சேவைக்கு அளித்த விரிவான பங்களிப்புகளுக்காகவே கௌரவிக்கப்படவுள்ளார்.

இந்தநிலையில் தமது பொது சேவையை குறிக்கும் வகையில், அரசரிடம் இருந்து கௌரவத்தை பெறுவதில் தாம் மிகவும் பெருமைப்படுவதாக ரணில் ஜெயவர்தன கூறியுள்ளார்.

[LPSIZ3I
]

குறுகிய வித்தியாசத்தில் தோல்வி

2015 இல் வடகிழக்கு ஹாம்ப்ஸயரின் நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில், 2024 வரை அந்தப் பதவியை வகித்தார்,

எனினும் அடுத்து வந்த தேர்தலில் அவர், லிபரல் டெமாக்ரட் வேட்பாளரிடம் மிகக் குறுகிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரசியலுக்கு அப்பால், சமூக முயற்சிகள், குறிப்பாக சிறுவர்களுக்கு உதவும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version