கடந்த 25 ஆம் திகதி ஹந்தானை பகுதியில் பாடசாலை பேருந்து சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக கண்டி காவல்துறையினரால் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்போது, கண்டி பகுதியைச் சேர்ந்த 21, 26, 27 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரத்திலிருந்து ஹந்தானைக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதியதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாக்குதல் சம்பவம்
விபத்தைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்குதலைத் தடுக்க முயன்ற போதிலும் பேருந்து சாரதியை சந்தேகத்துகுரிய குறித்த குழு தாக்கியுள்ளது.
அதனைதொடர்ந்து, தாக்குதலில் காயமடைந்த சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (26) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன்போது, பெண் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மூன்று ஆண் சந்தேக நபர்களும் ஜூலை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த கண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
