Home இலங்கை சமூகம் வீட்டை உடைத்து பிள்ளையை இழுத்துச்சென்ற இராணுவம்! செம்மணியில் கதறி அழுத தாய்

வீட்டை உடைத்து பிள்ளையை இழுத்துச்சென்ற இராணுவம்! செம்மணியில் கதறி அழுத தாய்

0

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கண்ணீர் விடும் தாய்மார்களின் கதைகள், நாட்டின் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட ஆழமான வலியையும் இழப்பையும் பிரதிபலிக்கின்றன.

குறிப்பாக, 2009இல் முடிவடைந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். இதற்கு எதிராக, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் ஆயிரக்கணக்கான நாட்களாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற பல தாய்மார்கள் தங்கள் உறவினர்களின் நிலை குறித்த உண்மையை அறியவும், நீதி கோரியும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செம்மணியில்  இடம்பெற்ற நீதி கோரல் போராட்டத்தில் இராணுவத்திடம் தமது உறவுகளை ஒப்படைத்த தாய்மார்கள் கதறி அழும் காணொளி மனதை பதைபதைக்க வைத்தது.

நீதியை காலம் காலமாக கோரும் பின்னணியில் அதற்கான தீர்வை தீர்வை எப்போது சிறிலங்கா அரசு பெற்றுக்கொடுக்க போகிறது என்ற கேள்விக்கு மத்தியில்,  இந்த அவலத்தின் சாட்சியங்களின் மன வலிகளை பின்வரும் காணொளி விளக்குகிறது…

https://www.youtube.com/embed/b1F8BzSY8o0

NO COMMENTS

Exit mobile version