Home இலங்கை குற்றம் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

0

கிரிந்திவெல பொலிஸ் பிரிவின் ரங்வல பகுதியில் அனுமதிப் பத்திரம் இன்றி
சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(20) சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாள்வரும் 24 முதல் 42 வயதுக்குட்பட்ட கஹவத்தை
பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இரத்தினக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரினால்
கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version