Home இலங்கை சமூகம் வெடிபொருட்களுடன் சிக்கிய நால்வர்: விசாரணையில் வெளியான காரணம்

வெடிபொருட்களுடன் சிக்கிய நால்வர்: விசாரணையில் வெளியான காரணம்

0

ஹசலக்க (Hasalaka) காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெல்கால பகுதியில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹசலக்க காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்போது, அவர்களிடமிருந்து, 01 கிலோ 550 கிராம் அமோனியா பவுடர், 116 செ.மீ நீள சர்வீஸ் சரம் மற்றும் 03 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணை

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37, 50 மற்றும் 60 வயதுக்குட்பட்ட மினிபே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மகாவலி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சந்தேகநபர்கள் இந்த வெடிமருந்துகளை கொண்டு வந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source: https://ibctamil.com/article/four-suspects-arrested-with-explosives-1719467544

NO COMMENTS

Exit mobile version