Home இலங்கை குற்றம் யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது

0

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நால்வர் கைது
செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்
அடிப்படையில் இன்று (30.10.2025) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு
பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 24, 25 வயதுகளையுடைய நான்கு
இளைஞர்கள் யாழ். மணியந்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவரிடமிருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் கெரோயின் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகள்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version