Home இலங்கை அரசியல் இலவச மின்சார இணைப்பு தொடர்பில் சத்தியலிங்கம் எம்.பி விடுத்த கோரிக்கை

இலவச மின்சார இணைப்பு தொடர்பில் சத்தியலிங்கம் எம்.பி விடுத்த கோரிக்கை

0

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்(P. Sathiyalingam) கோரிக்கை விடுத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான இன்றைய(03.03.2025) குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ சிறிய அளவில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு மானிய அடிப்படையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும்.

மீளக் குடியேறிய மக்கள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்கின்ற விவசாயம் மற்றும் மீன்பிடிக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்கும் செயற்பாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.youtube.com/embed/MFMR4dWlApo

NO COMMENTS

Exit mobile version