இதுவரை காலமும் உர மானியம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, எதிர்வரும் சில நாட்களில் அந்நிதி நிச்சயம் வழங்கப்படும் என விவசாயம், கால்நடை வளம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (18) நாடாளுமன்றத்தில் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
உர மானியம் தொடர்பாகக் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் அடுத்த போகத்தில் தீர்க்கப்படும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், விவசாயிகளை அரசர்களாக்கும் யுகமொன்றை நிச்சயமாக உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தொழில்
அரசாங்க விவசாய நிலங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்கும் எவ்வித தீர்மானமும் கொண்டுவரவில்லை எனவும் பிரதி அமைச்சர் வலியுருத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் விவசாய நிலங்கள் நாட்டிலிருந்து பறிக்கும் நடவடிக்கைகள் எச்சந்தர்ப்பத்திலும் எடுக்கப்படமாட்டாது என்றும், அரசங்கத்தின் இணக்கப்பட்டின் விவசாய அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்புத் தொடர்பாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அனைத்து விளைநிலங்களும் வளமானதாகவும் வருமானம் ஈட்டக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டும் அத்துடன் அதற்கு அரசாங்கம் தலையிடும் எனவும் பிரதியமைச்சர் விபரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.