Home இலங்கை அரசியல் மொட்டு அணிக்கு அழைப்பு விடுத்த சுதந்திரக் கட்சி

மொட்டு அணிக்கு அழைப்பு விடுத்த சுதந்திரக் கட்சி

0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள அனைவரும் மீண்டும்
தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அக்கட்சியின்
பொதுச்செயலாளரான துமிந்த திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

“மொட்டுக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களால் தான்
ஆரம்பிக்கப்பட்டது. எனவே, சுதந்திரக் கட்சி என்ற தாய்வீட்டில் கதவுகள் திறந்தே
உள்ளன.

சுதந்திரக் கட்சி தயார்

கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் வரலாம்.

சுதந்திரக் கட்சியின் வாக்குகள்தான் தேசிய மக்கள் சக்திக்குச் சென்றுள்ளது.

தற்போது அரசியல் என்பது நாடாளுமன்றத்தில் இல்லை. அதற்கு வெளியில்தான் உள்ளது.
எனவே, நாடாளுமன்றத்துக்கு வெளியில் சமூகத்தை அணிதிரட்ட சுதந்திரக் கட்சி
தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version