Home இலங்கை சமூகம் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்!

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்!

0

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை அண்மைக்காலத்தில் முடக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 26 நபர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

சொத்துக்களின் பெறுமதி

ஏனையவர்கள் பணச்சலவை சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணிகள், ஆடம்பர வீடுகள், வாகனங்கள், நகைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

அவற்றின் பெறுமதி அண்ணளவாக நான்கு பில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version