Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருகை

0

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட உதவி முகாமையாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமொன்றுக்காக அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

அங்குரார்ப்பண நிகழ்வு

இந்த விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல், கடன் மற்றும் நிர்வாகம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டின் முக்கிய அதிதியாகவும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனை நிதியமைச்சு, மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version