Home இலங்கை சமூகம் மினுவாங்கொடையில் உணவகமொன்றில் புழுக்களுடன் வழங்கப்பட்ட பிரைட் ரைஸ்

மினுவாங்கொடையில் உணவகமொன்றில் புழுக்களுடன் வழங்கப்பட்ட பிரைட் ரைஸ்

0

மினுவாங்கொடை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த உணவகம் ஒன்றில் மட்டக்களப்பை சேர்ந்த குழுவொன்று வாங்கி சாப்பிட்ட மதிய உணவான பிரைட் ரைஸ்ஸில் புழுவொன்று காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பயணித்த குழுவொன்று மினுவாங்கொடை பகுதியில் வாங்கிய உணவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு 

இதனையடுத்து சாப்பிடுவதற்கு வழங்கப்பட்ட உணவான பிரைட் ரைஸ் உணவில் புழுக்கள் நெளிந்து ஓடிய நிலையில் உணவக உரிமையாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த உணவகம் பிரதான வீதியில் அமைந்துள்ளமையினால் பொதுமக்கள் அதிகளவு உணவகத்தினை உணவுக்காக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version