Home இலங்கை சமூகம் திருமலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விழா

திருமலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விழா

0

Courtesy: Buhary Mohamed

திருகோணமலை (Trincomalee) – வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வெருகல் கலாச்சார மண்டபத்தில் இன்று (19) காலை குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர் விழா மண்டபத்திற்கு அழைத்து
வரப்பட்டு பின்னர் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக தீபச்சுடர்கள்
ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல்
பகுதியைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன், மாவட்ட
நிர்வாகச் செயலாளர் சி.அகிலன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள்,
மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து  அஞ்சலி
செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version