Home இலங்கை பொருளாதாரம் எரிபொருள் இறக்குமதியின் போது தரகுப் பணம்: அமைச்சர் விளக்கம்

எரிபொருள் இறக்குமதியின் போது தரகுப் பணம்: அமைச்சர் விளக்கம்

0

எரிபொருள் இறக்குமதியின் போது தரகுப் பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக தாம் குற்றம் சுமத்தவில்லை என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் எரிபொருளில் 162 ரூபா தரகுப் பணம் முன்னாள் அமைச்சருக்கு செல்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ அல்லது தமது கட்சியின் உறுப்பினர்கள் எவரோ குற்றம் சுமத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு லீற்றர் எரிபொருளில் 102 ரூபா வரி அறவீடு செய்யப்படுவதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.

விலைச் சூத்திரம்

மேலும் இந்த வரியில் 50 ரூபா திறைசேரியினால் கடனுக்காக அறவீடு செய்யப்படுகின்றது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார் என வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

  

எரிபொருளுக்கான விலை இந்த கடனையும் சேர்த்தே நிர்ணயம் செய்யப்படுகின்றது என அவர் கூறியுள்ளார். 

எரிபொருள் விலை நிர்ணயமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றது எனவும், இறுதியாக மேற்கொள்ளப்பட்ட விலை நிர்ணயமும் அவ்வாறே மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version