Home இலங்கை பொருளாதாரம் உலக சந்தையில் தளம்பல் நிலை! இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் தளம்பல் நிலை! இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பு

0

சர்வதேச சந்தையில் மீண்டும் எரிபொருளின் விலை கடந்த நாட்களில் அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்வது குறித்த இப்போது அறிவிக்க முடியாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்கள உள்ள நிலையில், இறுதி நாட்களில் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே இலங்கையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாத விலைத் திருத்தம் 

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்திற்கான விலைத் திருத்தம் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மத்தியக் கிழக்கில் தொடர்ந்து நிலவும் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை ஏற்ற இறக்கங்களோடு பதிவாகி வருகின்றது.

இந்த நிச்சயமற்ற சூழல் காரணமாக, மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன.

இந்த மாதம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று தினங்கள் இருக்கின்ற நிலையல், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்றதா, குறைவடைகின்றதா என்பதைப் பொறுத்தே இலங்கையில் இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

Source: https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1785129633

NO COMMENTS

Exit mobile version