Home இலங்கை பொருளாதாரம் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் டொலராக வீழ்ச்சி

அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் டொலராக வீழ்ச்சி

0

இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முன்னர் 6.8 பில்லியன் டொலர்களாக இருந்த கையிருப்பு குறைந்ததற்கு, இறக்குமதி தேவை அதிகரித்ததே முக்கிய காரணம் என நிதி அதிகாரிகள் கூறுகின்றனர்.

டொலர் வீழ்ச்சி

இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,

ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுப்பதற்காக மத்திய வங்கி சந்தையில் டொலர்களை வெளியிட்டதாலேயே கையிருப்பு குறைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ், ஆண்டு இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட 8.9 பில்லியன் டொலர் கையிருப்பு இலக்கிலிருந்து இலங்கை விலகிச் செல்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10

Source: https://tamilwin.com/article/foreign-exchange-reserves-fall-to-6-4-billion-1784873971

NO COMMENTS

Exit mobile version