சினோபெக் (Senopec) நிறுவனம் நேற்று (31.10.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
புதிய விலை
ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 311 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், 280 ஆக இருந்த ஒட்டோ டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபாவாக உள்ளது.
பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
இதேவேளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corpration) நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 319 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மற்ற வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.