எரிபொருள் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் எரிபொருள் விலையை குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கணக்காய்வாளர் அறிக்கை
இந்நிலையில், எரிபொருள் லீற்றர் ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட முடியும் எனவும் அதனை தாம் செய்வதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதியில் 36 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர் கணக்காய்வாளர் அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகத்குறிப்பிட்டுள்ளார்.