மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மண்ணெண்ணெய் விலையும் குறைந்தது
லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.