Home இலங்கை பொருளாதாரம் ஒக்டோபர் தொடக்கம் கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் மானியம்

ஒக்டோபர் தொடக்கம் கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் மானியம்

0

கடற்றொழிலிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்பிரகாரம், ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் கடற்றொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.

கடற்றொழிலை, நிலைபேறான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்தல், தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எரிபொருள் மானியம்

அதன் பிரகாரம் தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வரும் ஆழ்கடல் கடற்றொழிலை முன்னேற்றுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக எரிபொருள் மானியம் வழங்கவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version