Home இலங்கை அரசியல் கியு ஆர் முறையை அடிப்படையாக கொண்டு எரிபொருள் நிவாரணங்கள்! சஜித் வெளியிட்ட நற்செய்தி

கியு ஆர் முறையை அடிப்படையாக கொண்டு எரிபொருள் நிவாரணங்கள்! சஜித் வெளியிட்ட நற்செய்தி

0

கியு ஆர் (QR code) முறையை மையமாகக் கொண்டு கடற்றொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், முச்சக்கர
வண்டி உரிமையாளர்களுக்கும், எரிபொருள் நிவாரணங்களை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடற்றொழிலாளர்களுக்கான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கும் சலுகைகளை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டார்.

புத்தளத்தில் நேற்று(10) ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 43 ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொள்கை திட்டம்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தை சுருக்கி மக்களின் மீது சுமையை அதிகரித்து மக்களை அழுத்தத்திற்கு உட்படுத்துகின்ற கொள்கை திட்டமொன்றை பின்பற்றுகின்றார்.

அத்தோடு தன்னை தோல்வியடையச் செய்து அநுரகுமாரவை வெற்றியடைய செய்வதற்கு அநுரகுமார திசாநாயக்க உடன் வித்தியாசமான கூட்டமைப்பு ஒன்றையும் ஏற்படுத்திக்
கொண்டுள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அநுர ரணில் டீல் 

ரணிலும் அநுரவும் சிறந்த அரசியல் டீல் ஒன்றை செய்திருக்கின்றார்.

அவர்களுடைய
டீல் தொடர்பில் தனக்கு பிரச்சினை இல்லை. எனக்கு 220 இலட்சம் மக்களுடனே டீல் இருக்கின்றது.

இந்த மக்கள் வீழ்ந்துள்ள இடத்திலிருந்து மீட்டெடுப்பதே தமது
எதிர்பார்ப்பு.

அத்தோடு ஜனாதிபதி அவரின் நெருங்கியவர்களுக்கும், அவரின் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும் அதிக சலுகை வழங்குவது அவருடைய பழக்கமாகும்.மிகப்பெரிய செல்வந்தர்களே அவருடைய வகுப்பினராகும்.

அதனால் தான் IMF வேலைத்திட்டத்தின்
கீழ் தேசிய கடனை மறுசீரமைக்கின்ற போது தொழிலாளர் வர்க்க மக்களின் மீது சுமையை
அதிகரிக்கின்றார்.

சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுகுமார ரணில் விக்ரமசிங்க
உடன் டீல் செய்திருக்கின்றார்.

அவர்களின் முன்னேற்றம்

இவர்கள் நாட்டை கட்டியெழுப்பாமல் அவர்களின்
முன்னேற்றத்திற்காகவே டீல் செய்திருக்கின்றார்கள்.

கடந்த முறை 69 இலட்சத்தை வழங்கி தவறிழைத்துக் கொண்டமையால் மீண்டும் ஒருமுறை
பொய் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

ரணிலும் அநுரவும் ஒன்றாக இணைந்து
கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

நாட்டிற்கொன்றை காட்டிக் கொண்டு கீழால் இருவரும் டீல் செய்து
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி பிரதமர் பதவிகளை பிரித்து
கொண்டு இருக்கின்றார்களா என்கின்ற சந்தேகம் உள்ளது.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version