Home இலங்கை சமூகம் டித்வா புயலின் கோரம்! பலரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட 31 சடலங்கள்

டித்வா புயலின் கோரம்! பலரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட 31 சடலங்கள்

0

கண்டி, உடத்தல, நெலும்மல பகுதியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களை சேர்ந்த 31 பேரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளன.

கண்டி, உடத்தல, நெலும்மல பகுதியில் கடந்த 27 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்திருந்தனர்.

எதிர்பாராத தருணத்தில், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியில் இருந்து ஒரு பெரிய மண் மேடு சரிந்து சிறிய கிராமத்தை முழுமையாக மூடியிருந்தது.

தொடரும் மீட்பு பணிகள்

அழகான நெல் வயலின் நடுவில் அமைந்திருந்த இந்த கிராமத்திற்கு மேலே அமைந்திருந்த யஹங்கல மலைத்தொடரும், நக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 31 பேர் சடலங்களாக மீட்கப்பட்டு பலரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.

NO COMMENTS

Exit mobile version