Home இலங்கை சமூகம் கந்தபளை மண்சரிவில் மாயமான குடும்பம்! மீட்பு பணியில் இராணுவத்தினர்

கந்தபளை மண்சரிவில் மாயமான குடும்பம்! மீட்பு பணியில் இராணுவத்தினர்

0

நுவரெலியாவில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக கந்தபளை சந்திரகாமம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன ஒரு குடும்பத்தைத் தேடும் நடவடிக்கையை இராணுவம் ஆரம்பித்துள்ளது.

இரண்டு குழந்தைகளின் தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களத பாட்டி ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் நுவரெலியா படைப்பிரிவின் படையினர் நேற்று (01) இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நிலச்சரிவு

27 ஆம் திகதி மதியம் பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் குறித்த குடும்பம் தங்கியிருந்த வீடு இடிந்து விழுந்தததாகவும், மேலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் அந்த நேரத்தில் காணமல்போனவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததாகக் கூறுகிறார்கள்.

இந்நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version