இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கட்சியினரே தையிட்டி விகாரையின்
கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(18.04.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில்
குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியினரே விகாரையை அமைக்கும்
நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை
திசைதிருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர்.
ஆனால், இன்று குத்துக்கரணம் அடித்து மக்களை ஏமாற்றி எமது மக்களின் நலன்களை
முன்னிறுத்தி போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக தமிழ் தேசிய
மக்கள் முன்னணியினர் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
