நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்த கருத்தை பொய் என நிரூபிக்க வேண்டிய கட்டாய தேவையில் அரசாங்கம் காணப்படுவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (06.06.2025) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் ஜனாதிபதி அநுரவினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தொடர்பில் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவும், இதனை பொய் என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள கானொளியில் காண்க…
https://www.youtube.com/embed/f_1GfiLdxNc
