Home இலங்கை அரசியல் இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள்…! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள்…! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

0

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(03) மாலை
நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேச மக்கள் சுதந்திர தினமாக கருதுவது
கிடையாது.

இலங்கையின் சுதந்திரம்

இலங்கையின் சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய
அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.

அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில்
கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். 

அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான்
முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள்
எப்போதும் நிராகரிப்பார்கள்.

அடிமைசாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கிற
அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப்
போவதில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/6TSmg83U4Us

NO COMMENTS

Exit mobile version