தமிழ்த் தேசிய பேரவைக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் (Seeman) இடையிலான
சந்திப்பு ஒன்று நீலாங்கரையில் இடம்பெற்றுள்ளது.
சீமானின் இல்லத்தில் இன்று (19) காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்த சந்திப்பு சுமார் 2.00 மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு
உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம், ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ்
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாக
பேசப்பட்டன.
சந்திப்பில் கலந்துகொண்டோர்
அத்துடன் இந்த சந்திப்பின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உத்தியோகபூர்வ பேச்சாளர் சுகாஸ் கனகரத்தினம், கொள்கைப்பரப்புச் செயலாளர் நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
