Home இலங்கை அரசியல் தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ் தேசிய பேரவை!

தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ் தேசிய பேரவை!

0

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்ற தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின்
பிரமுகர்கள் இன்றையதினம்(18.12.2025) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக தமிழ்
தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரான
ஏக்கியராஜ்ய அரசியலமைப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்திய அரசினூடாக
அழுத்தங்களை வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

கடற்றொழிலாளர்களின்  அவலங்களுக்கு

ஈழத்தமிழ்க் கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டுமென்று அவரிடம் கோரினோம்.

எம்மால் கையளிக்கப்பட்ட அறிக்கையை விரைவில் மக்களுக்குப்
பகிரங்கப்படுத்துவோம். மேலும், சந்திப்புகள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version